பள்ளிக் கல்வித்துறை சார்பில் 173 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

191

பள்ளிக் கல்வித்துறை சார்பில் 173 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அனைவருக்கும் இடைநிலை கல்வி என்ற திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 68 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 115 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடங்களை, காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம், மதுரை மாவட்டம் மேலூரில் கட்டப்பட்ட 68 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூலகக் கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் 61 கோடியே 58 லட்சம் செலவில் கட்டப்பட்ட பேரிடர் மீட்பு மையம், கலந்தாய்வு கூடம், மதுரை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் தொழில் நுட்ப கட்டடத்தையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.