பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

236

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நால்ரோட்டு அருகே சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரின் சடலத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த வாலிபர், திருப்பூர் மாவட்டம் செம்மேகவுண்டம் பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதன் ஓட்டுனரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.