பல்லடத்தில் விவசாய சங்க நிர்வாகி வீட்டில் மர்மப் பொருள் வெடித்ததில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

216

பல்லடத்தில் விவசாய சங்க நிர்வாகி வீட்டில் மர்மப் பொருள் வெடித்ததில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் நகர இளைஞரணி தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், இரவில் மர்மப் பொருள் ஒன்று வெடித்து சிதறி தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீவிபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.