பல்லடத்தில் பள்ளி தாளாளரிடம் கத்தி முனையில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளாது.

160

பல்லடத்தில் பள்ளி தாளாளரிடம் கத்தி முனையில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளாது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகாலெட்சுமி உடுமலையிலுல்ல தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார். சம்பவத்தன்று அசோக் அலுவலக பணிக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது இவர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து வீட்டினுள் நுழைந்த மர்ம ஆசாமி தனியாக இருந்த மகாலெட்சுமியிடன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 சவரன் நகையை திருடி சென்று மாயமாகிவிட்டார். இதையடுத்து பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.