பள்ளி சீருடையில் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம். | இலவச பேருந்து அட்டை தயார் செய்யும் பணி தாமதம் !

657

பள்ளி மாணவ – மாணவிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்க தாமதமாவதால், பள்ளி சீருடையில் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவ – மாணவிகளுக்கு இலவச பேருந்து அட்டை தயார் செய்வதில் சற்று தாமதமாகி இருப்பதாக கூறினார். எனவே பள்ளி சீருடையில் மாணவ – மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.