ரஷ்ய ரெயில் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை உயர்வு | புதினுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.

252

ரஷ்ய ரெயில் குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இடையேயான சுரங்கப் பாதையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ரெயிலில் நடந்த குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், குற்றவாளிகளை கண்டு பிடித்து, தண்டனை பெற்று தருவதில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா உதவும் என்றும் டிரம்ப் உறுதி அளித்தார்.