மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை..!

338

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சில கைதிகளுக்கு விதிகளை மீறி டி.வி., செல்போன் உள்ளிட்ட வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டிருந்ததற்கான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து புழல் சிறையில் சிறைத்துறை ஏடிஜிபி நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளை உஷார்ப்படுத்தினார். இதனிடையே சேலம், கோவை, கடலூர் சிறைகளிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாளையங்கோட்டை சிறையில் இன்று காலை உதவி ஆணைய விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

கைதிகளின் குளியல் அறை, சமையல் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்ட அதிகாரிகளுக்கு வெறும் பீடி கட்டுகள் மட்டுமே கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனிலும் தமிழகத்தில் உள்ள சிறைகளில் அதிரடி சோதனைகள் தொடரும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.