பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணையை உயர்த்தி கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் அணையில் குதித்து தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

306

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணையை உயர்த்தி கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் அணையில் குதித்து தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் புல்லூர் என்ற இடத்தில் ஆந்திர அரசு 16 அடி உயரத்தில் தடுப்பணை கட்டியுள்ளது. இந்த தடுப்பணையால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு லட்சக்சணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக புல்லூர் அணை நிரம்பியுள்ளது. இந்நிலையில், பள்ளத்தூரைச் சேர்ந்த சீனு என்பவர் ஆந்திர அதிகாரிகள் முன்னிலையில் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அணை முழுவதும் நீர்நிரம்பி இருந்தும் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், வேடிக்கை பார்க்க வந்த அவர் தவறுதலாக அணையில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.