ஆந்திர அரசின் நடவடிக்கையால், தமிழக விவசாயிகள் அதிர்ச்சி..!

237

வாணியம்பாடி அருகே பாலாற்றில் ஆந்திர அரசு மேலும் ஒரு புதிய தடுப்பணையை கட்டி வருவதை அறிந்த தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் உற்பத்தியாகி, பாலாறு ஆந்திரா வழியாக தமிழகத்தில் பாய்ந்தோடி வங்க கடலில் கலக்கும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 22 தடுப்பணை கட்டியுள்ளது. இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் புல்லூர் அருகே, பெரும்பள்ளம் பகுதியில், பாலாற்றின் கிளை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதியதாக தடுப்பணை கட்டி வருகிறது. சுமார் 10 அடி உயரம், 10 அடி அகலத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பணைப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

தொடர்ந்து, மேலும் சில தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகளும் ஆந்திர அரசு சார்பில் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகத்துக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிரந்தரமாக பாலாற்றில், தண்ணீர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ள தமிழக விவசாயிகள், மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.