திமுக தலைவர் கருணாநிதியை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல்..!

185

திமுக தலைவர் கருணாநிதியை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சர் பழனிச்சாமி புறப்பட்டு சென்றார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், சேலத்தில் இன்று கலந்து கொள்ளவிருந்த மாநகராட்சி நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, அவசரமாக, கார் மூலம் கோவை சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, அங்கிருந்து தனிவிமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். இந்தநிலையில், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.