21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

111

21 சட்டமன்ற தொகுதிகளுக்கு எப்போது இடைத் தேர்தல் வந்தாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிச்சயம் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். விழுப்புரம் சின்னசேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி பிரதமரை தேர்ந்தெடுக்கப்போவதாகவும் கூறினார்.