மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

264

மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு வலிமையாகவும், நிலையாகவும் உள்ளது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.