முதல்வர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் – பன்னீர் செல்வம்

351

இந்தியாவின் முன்னோடி மாவட்டமாக சேலம் திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள தீய சக்திகளை அழிக்க அ.தி.மு.க மட்டுமே ஒரே ஆயுதம் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் விழா எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், சபாநாயகர் தனபாலும் அ.தி.மு.க அரசை யாராலும் அழிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் உள்ள தீய சக்திகளை அழிக்க அ.தி.மு.க தான் ஒரே ஆயுதம் என்று கூறினார். அ.தி.மு.கவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்றும், மக்கள் யார் ஏமாற்றுபவர்கள் என்று தெரிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவுத்துறையில் இந்தியாவின் முன்னோடி மாவட்டமாக சேலம் திகழ்வதாக கூறினார். எம்,ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மா தான் தங்களுடைய ஆட்சிக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், பெஞ்சமின், செல்லூர் ராஜூ, பாண்டியராஜன், வீரமணி, சரோஜா உள்ளிட்ட அமைச்சர்களும், அ.தி.மு.க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.