விஜயகாந்த்தை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

104

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து அவரது உடல்நலம் விசாரித்தார்.

சென்னை கிரீன்வேஸ் இல்லத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு புறப்பட்டு விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி ஆகியோர் உடன் சென்றனர்.

விஜயகாந்த் வீட்டிற்கு வருகை தந்த முதல்வர் மற்றும் அதிமுக நிர்வாகிகளை அக்கட்சியின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். பின்னர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர் பூரண உடல் நலம் பெற்று வழக்கம் போல பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என ஆறுதல் தெரிவித்தார்.