அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடுகிறது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

92

மக்களின் தேவையை உணர்ந்து செயல்படுவதால், அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமை பட கூறியுள்ளார்.

மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபதில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் தேவையை உணர்ந்து செயல்படுவதால், அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமை பட கூறினார். மேலும், தமிழகத்தில் யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன்தான் அதிமுக கூட்டணி வைக்கும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.