முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் படை வீரர்களின் கொடி நாள் அனுசரிப்பு..!

110

நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்த தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் சேவையையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7 ஆம் தேதி படை வீரர்களின் கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் தியாக சீலர்களான நமது முப்படை வீரர்களின் நலன் காத்திடவும், அவர்தம் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். தமிக மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திட, கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.