சிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

102

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் என முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், பல்வேறு சிகிச்சை பிரிவுகளை முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 36கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருதய அறுவை சிகிச்சை அரங்கம்,தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவப் பிரிவுகள் தொடங்கி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஏழை எளிய மக்களுக்காக, சிறந்த உயர்தர மருத்துவ வசதி அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். தொடந்து, மருத்துவமனை வளாகத்தில், அமைந்துள்ள உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அம்மா உணவகத்தில் உணவு உண்டனர்.