ஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திமுக தலைவர் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

877

மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தலைவராக வருவார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் யார் வேண்டுமானாலும் உயர் பொறுப்புகளுக்கு வரலாம் என கூறினார். மத்திய அரசிடம் மக்களுக்காக கருணாநிதி எதையும் கேட்டு வாங்கவில்லை என்று சுட்டிக் காட்டிய முதலமைச்சர், மாறாக தனது குடும்பத்திற்கு பதவிகளை மட்டுமே பெற்றதாக குற்றம்சாட்டினார். மேலும் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் தான் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தலைவராக வருவார் என்று விமர்சித்தார்.