தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வரும் எதிர்க்கட்சிகள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

232

குற்றச்சாட்டு கூறுவதால் மட்டுமே, ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரம் தொடர்பாக, சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, முதலமைச்சர் பழனிச்சாமி இதனை தெரிவித்தார். மேலும், அரசுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்ததன் காரணமாக, எதிர்க்கட்சிகள் அமைச்சர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாக தெரிவித்தார். பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என்று கூறிய அவர், பெட்ரோல் மீதான வாட் வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார்.

மேகதாதுவில் எக்காரணத்தை கொண்டும் அணை கட்டக் கூடாது என்று கூறிய முதலமைச்சர் பழனிச்சாமி, அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்தார். தேர்தலில் பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று கூறிய முதலமைச்சர், அப்படிப்பட்ட நிலையில், அதிமுக இல்லை எனவும் தெரிவித்தார்.