மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை..!

152

மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னையில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, சரோஜா மற்றும் திண்டுக்கல், திருப்பூர், விழுப்புரம், கோவை மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், நான்கு மாவட்டங்களிலும் நடைபெற்று வரும், அரசு திட்டங்களின் வளர்ச்சிப்பணிகள் நிலை குறித்து முதலமைச்சர் பழனிச்சாமி கேட்டறிந்தார்.

4 மாவட்டங்களிலும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது, குடிநீர் மற்றும் குடிமராமத்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாவட்டங்களில் மக்கள் தேவைகளை நிறைவேற்றி, அரசு திட்டங்களின் பலன்கள் அவர்களை விரைவாக சென்றடைய, ஆட்சியர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவுறுத்தினார்.