மத்திய அரசின் திட்டங்களுக்கும் தமிழக அரசு தலையாட்டாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

147

மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் தமிழக அரசு தலையாட்டாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் வரவேற்கும் நலத் திட்டங்களை எதிர்க்கட்சிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்றார். மழை, வெள்ள காலங்களின் போது தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நீர்நிலைகளை தூர்வாரியதால் தான் மழை நீரை சேமித்து வைக்க முடிகிறது என விளக்கமளித்த அவர், மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு தலையசைத்து ஏற்றுக்கொள்ளாது என்றார்.