வெண்கலம் வென்ற 3 பேருக்கு தலா ரூ.20 லட்சம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

368

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தலா 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவிற்கு 3 வெண்கலம் கிடைத்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா, மற்றும் சவுரவ் கோஷல் ஆகிய 3 பேரும் பதக்கங்கள் வென்றனர். இந்நிலையில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 3 பேருக்கு தலா 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர் இது தொடர்பாக 3 பேருக்கும் தனித்தனியாக பாராட்டு தெரிவித்து கடிதமும் அனுப்பியுள்ளார். அதில் மென்மேலும் பதக்கங்களை குவிக்க அவர் வாழ்த்து கூறியுள்ளார்.