திரைப்படத்துறையினருக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

348

திரைப்படத்துறையினருக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், 100 ஏக்கர் நிலப்பரப்பில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு திரைப்பட தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, மற்றும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, பொன் வண்ணன் உள்ளிட்ட திரையுலகினரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, எம்ஜிஆர் திரைப்பட தளத்தில் ஜெயலலிதா அரங்கம் பெயரில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக கூறிய அவர், மேலும் ஆயிரம் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். திரைப்பட தொழிலாளர்களுக்கு சட்டப்படி வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர் பழனிச்சாமி, விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்று தெரிவித்தார்.