சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

409

72-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

72-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மூப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதனை தொடர்ந்து விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்துல் கலாம் விருது சென்னை அண்ணா பல்கலைக் கழக தக்‌ஷா ஆராய்ச்சிக் குழுவுக்கு வழங்கப்பட்டது.

நல் ஆளுமை விருது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். கல்பனா சாவ்லா விருது, வால்பாறையை சேர்ந்த முத்துமாரிக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கியும், சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு, பொன்னாடை அணிவித்தும் கவுரவிக்கப்பட்டனர்.