கோவை சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு..!

332

கோவை சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார் .

இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் சொகுசுக்கார் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியதில், அதில் பயணம் செய்த 3 பேர், சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவிகள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் பழனிச்சாமி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.