மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்..!

1412

நாடு முழுவதும் 8-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு தலையிட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நான்கரை லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.