4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்

325

தமிழகத்தில் காலியாக 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர் என்றார். வரும் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். நடந்த முடிந்த தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.