திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

100

மத்திய அரசில் திமுக இடம்பெற்றிருந்தபோது தமிழகத்துக்காக எதையுமே செய்யவில்லை எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக-காங்கிர1 கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி எனக் குறிப்பிட்டார். மத்திய அரசில் திமுக இடம்பெற்றிருந்தபோது தமிழகத்துக்காக எதையுமே செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் வேளாண் கடனைத் தள்ளுபடி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது திமுக எப்படி வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பினார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.