50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி என திட்டவட்டம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

163

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வினோபா நகர், கருணாநிதி நகரில் தினகரனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். வாக்காளர்கள் தங்களுக்கு அமோக ஆதரவை தெரிவித்து வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். தோல்வி பயத்தில் எதிர்கட்சியின் பொய்ப் பிரசாரத்தை செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.