பழனி கோவில் உண்டியலில் ஒரு கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 213 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

196

பழனி கோவில் உண்டியலில் ஒரு கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 213 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.
பழனி மலைக்கோவிலில் முருகபக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் வகையில், கடந்த 24 நாட்களாக செலுத்திய உண்டியல் காணிக்கை இணை ஆணையர் ராஜமாணிக்கம் முன்னிலையில் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது. இதையடுத்து பழனி திருக்கோவில் அதிகாரி ராஜமாணிக்கம், உதவி ஆணையர் சிவலிங்கம் மேற்பார்வையில் வங்கி ஊழியர்கள், திருக்கோவில் ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் என 350க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் ஒரு கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 213 ரூபாய், 715 கிராம் தங்கம், 10 ஆயிரத்து 700 கிராம் வெள்ளி மற்றும் ஆயிரத்து 481 பாரின் கரன்சியும் முருகபெருமானுக்கு வருமானம் கிடைத்துள்ளது.