பழனி முருகன் கோவிலில் இரண்டு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் காணிக்கை…

188

பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் இரண்டு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அதன் படி அளிக்கப்பட்ட காணிக்கையை திருக்கோவில் துணை ஆணையர் செந்தில் குமார் முன்னிலையில் கல்லூரி மாணவிகள், தனியார் வங்கி ஊழியர்கள், பக்தர்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், மொத்தம் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ தங்கம், 11 கிலோ வெள்ளி ஆகியவை கணக்கிடப்பட்டது.