பதவிப் பறிபோனாலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் தெரிவித்துள்ளார்.

430

பதவிப் பறிபோனாலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அதிமுகவினர் இடையே அதிகார போட்டி நிலவி வருவதாக தெரிவித்தார். நேற்று சசிகலா ஆதரவாளர்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதாகவும், அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும் நடராஜ் கூறினார். எனவே நாளை நடைபெறும் சட்டசபை வாக்கெடுப்பில் மக்களின் விருப்பப்படியே வாக்களிப்பதாக கூறிய அவர், பதவி பறிபோனாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டேன் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.