வெள்ளம் சூழ்ந்த பகுதியில் அதிவிரைவுப் படை அசத்தல்..!

346

பாலக்காடு அருகே வெள்ளத்தின் மீது பாலம் கட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிவிரைவுப் படையினர் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மங்கலம் அணை கிராமத்தில் வெள்ளத்திற்கு நடுவே பொதுமக்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய அதிவிரைவு படையினர் அங்கு விரைந்தனர். அந்த பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கண்ட அதிவிரைவுப்படையினர், மரக்கட்டைகளால் பாலம் ஒன்றை உருவாக்கி, அதனை வெள்ளத்தின் மீது பொருத்தியுள்ளனர். பின்னர், அந்த பாலத்தின் வழியாகச் சென்று, கிராம மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினர்.