முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி..!

555

பாகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பாகிஸ்தானில் வரும் 25ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 272 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் பஞ்சாப் மாகாணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 95 இடங்களைக் கொண்ட அந்த மாகாணத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் அரசியல் கட்சி பிரதமர் பதவியைக் கைப்பற்றுவது வாடிக்கையாக உள்ளது.

இங்கே ஊழல் வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றபோதிலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் செல்வாக்கு சரியவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் பஞ்சாப் மாகாணத்தில் தனது ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் இம்ரான்கான் ஈடுபட்டுள்ளார். எனவே இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பின் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான்கானின் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.