பாகிஸ்தான் தீவிரவாதி ஹசியா அனன், இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

374

பாகிஸ்தான் தீவிரவாதி ஹசியா அனன், இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் பல்வேறு வகைகளில் இந்தியாவிற்கு இடையூறு செய்து வருகிறது. ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் லக்ஷர் இ தொய்பா அமைப்பிடம் சிறப்பு பயிற்சி பெற்ற பயங்கரவாதி ஹசியா அனன், இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது மக்கள் மற்றும் ராணுவ முகாம்களை தாக்குவதே இவரது குறிக்கோளாக இருக்கும் என்றும், ஸ்ரீநகர், விஜய்பூர் ரயில் நிலையம், சம்பா தொழில் துறை பகுதி, ஜம்மு பல் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி, குர்தாஸ்பூர் இந்திய ராணுவ முகாம் மற்றும் பஞ்சாப்பின் தினாநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்தியாவில் வசிக்கும் சில பயங்கரவாத அமைப்பினரின் உதவியுடன் ஹசியா அனன், இந்தியாவிற்குள் வந்திருப்பதாகவும் புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.