பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

340

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் பகாவல்பூர் மாநிலத்தில் பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீடுகள் நிறைந்த பகுதிகளில் கவிழ்ந்துள்ளது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பிடிக்க ஏராளமானோர் முயன்றுள்ளனர். அப்போது அந்த டேங்கரில் தீப்பிடித்து வெடித்ததில், சுற்றுவட்டாரத்தில் இருந்த வீடுகள், கடைகள், கார்கள் வாகனங்கள் என அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீவிபத்தில் சிக்கி இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.