பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தில் தொடர்புடைய ஏழு நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடைவிதித்துள்ளது.

230

பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தில் தொடர்புடைய ஏழு நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடைவிதித்துள்ளது.
பாகிஸ்தான் உலக நாடுகளின் கண்களில் மண்ணை தூவி ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை கண்டு கொள்ளாமல் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தில் தொடர்புடைய ஏழு நிறுவனங்கள் மீது அமெரிக்கா திடீர் பொருளாதார தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதால் இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஏழு நிறுவனங்களும் ஏற்றுமதி நிர்வாக கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட இந்த நிறுவனங்களும் எந்த பொருளை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்துள்ளன என்பது குறித்து அமெரிக்கா எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.