பாகிஸ்தானில் கர்ப்பிணிப் பெண் பாடகி ஓருவர் மேடையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டர் ..!

2926

பாகிஸ்தானில் கர்ப்பிணிப் பெண் பாடகி ஓருவர் மேடையிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமீனா சாமன்,என்ற இளம் பெண் பாடகி மேடையில் அமர்ந்தவாறே பாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஓருவர் பாடகியிடம் எழுந்து நின்று பாடுமாறு கூற அதற்கு, தாம் கர்ப்பிணியாக இருப்பதால் நிற்கமுடியாது என்றார். பின்னர் பாடகி மீது அந்த ரசிகர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் மேடையில் மயங்கி விழுந்த பாடகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மேடையில் கர்ப்பிணி பெண் பாடகி சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.