பாகிஸ்தான் கலாச்சார அமைச்சகத்தின் குளறுபடி காரணமாக, இந்திய மூவர்ண கொடியுடன் அந்நாட்டு போர் விமானம் பறக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

383

பாகிஸ்தான் கலாச்சார அமைச்சகத்தின் குளறுபடி காரணமாக, இந்திய மூவர்ண கொடியுடன் அந்நாட்டு போர் விமானம் பறக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போர் விமானம் பறக்கவிடப்பட்ட வீடியோ ஒன்று அந்நாட்டு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த ஒரு நிமிட வீடியோவின் துவக்கத்தில் 2 ஜெஎப் – 17 ரக போர் விமானங்கள் இந்திய தேசிய கொடியுடன் பறப்பதாக உள்ளது. உண்மையில், இந்தியா சமீபத்தில் விமானப்படையில் சேர்த்த தேஜாஸ் போர் விமானமும், பாகிஸ்தான் போர் விமானத்தின் தோற்றமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் இந்திய போர் விமானம் பறக்க விடப்பட்ட வீடியோவை பாகிஸ்தான் பயன்படுத்தி உள்ளது. ஆனால் இந்திய போர் விமானம் பறந்த சில நிமிடங்களுக்கு பிறகே அதில் இந்திய தேசிய கொடி கட்டப்பட்டிருப்பது தெரியும். இதனை பாகிஸ்தான் கவனிக்காமல் போர் விமான வீடியோவை பயன்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து தயாரித்த ஜெஎப் – 17 போர் விமானத்தில் இந்திய கொடி பறப்பது போன்று வீடியோ வெளியானதால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு அந்த வீடியோவை அவசரம் அவசரமாக நீக்கியுள்ளது.