பாகிஸ்தான் ஒருமுறை சுட்டால் நமது ராணுவத்தினர் கணக்கற்ற முறையில் சுட்டு பதிலடிக் கொடுக்க அனுமதி – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

1705

பாகிஸ்தான் ஒருமுறை சுட்டால் நமது ராணுவத்தினர் கணக்கற்ற முறையில் சுட்டு பதிலடிக் கொடுக்க அனுமதி அளித்திருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.திரிபுராவின் பர்ஜாலா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா விரும்பவில்லை என கூறினார். அண்டை நாடுகளுடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புவதாக கூறிய ராஜ்நாத் சிங், ஆனால் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார். எனவே பாகிஸ்தான் ராணுவம் ஒருமுறை சுட்டால் இந்திய வீரர்கள் கணக்கற்ற முறையில் சுட்டு பதிலடிக் கொடுக்க அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.