பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு

230

பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல் மற்றும் இடிமின்னல் மழைக்கு 39 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் பெய்த இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு 39 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் ஏராளமான பொருள்களும் சேதமாகியுள்ளன. மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகளுக்கு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.