பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் பயணித்த 47 பேர் உயிரிழந்தனர். இதுவரை 21 நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

252

பாகிஸ்தானில் சித்ரால் நகரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி, விமான ஊழியர்கள் உட்பட 47 நபர்களுடன், பிகே – 661 என்ற பயணிகள் விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்தில், கண்காணிப்பு அறையுடனான தொடர்பை இழந்து, ரேடாரில் இருந்து மாயமானது. இ்தனையடுத்து, விமானத்தை தேடும் பணியை பாகிஸ்தான் மீட்புப்படையினர் மேற்கொண்டனர். இந்த நிலையில், விமானம் அப்போட்டாபாத் நகர் அருகே ஹவேலியன் என்னும் பகுதியில் சென்ற போது கிழே விழுந்து வெடித்து சிதறியது கண்டறியப்பட்டுள்ளது. மீட்புப்படையினரின் தேடும் பணியில் இதுவரை 21 நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல் கருகிய நிலையில் இருப்பதால், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் விமானங்களில் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.