தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் அந்நாடு பத்து துண்டுகளாக சிதறும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

259

தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் அந்நாடு பத்து துண்டுகளாக சிதறும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் கதுவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த 1947 ஆம் ஆண்டில் மத அடிப்படையில் இந்தியா இரண்டாகப் பிரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினார். உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் அமைதியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர், நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வளர்ச்சிப்பாதையில் நடைபோடவே இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். தீவிரவாத செயல்களை ஒழிக்க முடியாமல் திணறி வரும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக கூறிய ராஜ்நாத் சிங், அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவே இந்தியா விரும்புவதாக தெரிவித்தார். தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ளாவிட்டால் அந்த நாடு பத்து துண்டுகளாக சிதறுவது உறுதி என்றும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.