பாகிஸ்தான் மருத்துவமனையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

165

பாகிஸ்தான் மருத்துவமனையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
பலுஜிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிலால் என்பவர் மர்மநபர்களால் இரண்டு நாட்களுக்கு முன்பு சுடப்பட்டார். இதில், படுகாயமடைந்த அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பிலாலின் உடல் மருத்துவமனையில் உள்ள அவசர துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிலால் உயிரிழந்த தகவல் அறிந்து அங்கு ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். அப்போது, மருத்துவமனையில் திடீரென புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், வழக்கறிஞர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் 30 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து. உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து குவெட்டா மாகாண காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.