தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் | பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒருமுறை அமெரிக்கா வலியுறுத்தல்

132

தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மீண்டும் ஒருமுறை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நிகழுமானால், அது பாகிஸ்தானுக்கு மிகுந்த சிக்கல் ஏற்படுத்துவதாக அமையும் என வாஷிங்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் போர் பதற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, அது இருநாடுகளுக்குமே ஆபத்தானது என்று கூறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, தீவிரவாதிகள், தீவிரவாத இயக்கங்கள் தொடர்பாக, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.