பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி | தென் ஆப்பிரிக்கா 262 ரன்னில் ஆட்டமிழந்தது

131

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 262 ரன்கள் எடுத்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. ஏற்கனவே, தென்ஆப்பிரிக்கா அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கிராமும், எல்கரும் களமிறங்கினர். எல்கர் 5 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய ஆம்லா 41 ரன்னிலும் புருயின் 49 ரன்கள் எடுத்தும் மார்கிராம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 90 ரன்னில் வெளியேறினர். தேனீர் இடைவேளைக்குப்பிறகு பின் ஆட்டம் தொடங்கியதும் ஹம்சா 41 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்கா 77.4 ஓவரில் 262 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.