தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

302

தெற்காசியாவில் அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த விடுதலை போரில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அண்டை நாடுகளுடன் நட்புணர்வை மட்டுமே இந்தியா விரும்புவதாக கூறினார். அமைதியும், வளர்ச்சியும் நாட்டின் முக்கிய அம்சங்கள் என குறிப்பிட்ட அவர், அண்டை நாடுகளுடன் இணைந்து வளர்ச்சியடைவதே இந்தியாவின் விருப்பம் என தெரிவித்தார். இந்திய நாட்டின் வளர்ச்சியை தடைசெய்யும் விதமாக பாகிஸ்தானின் சிந்தனை உள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார். மேலும், தீவிரவாதத்தை தூண்டு விடுவது தான் பாகிஸ்தானின் முக்கிய கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.