பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

259

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு, பயணிகள் ரயில் முல்தான் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென்று சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் இரண்டு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு ஒன்றன் மீது ஒன்று விழுந்தன. இவ்விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் மற்றும் ரெயில்வே காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் ரயில் ஓட்டுனர் சிக்னலை சரியாக கவனிக்காமல் சென்றதால் இவ்விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.