எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா் இறுதிச்சடங்கில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

263

காஷ்மீர் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராய்சிங் என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, தாக்குதலில் உயிர் நீத்த ராணுவ வீரர் ராய்சிங்கின் உடல் அவரது சொந்த ஊரான, ஹரியானா மாநிலம், கேரி சம்பலா என்ற கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ராய்சிங்கின் உடலுக்கு கிராமமக்கள் ஏராளமானவர்கள் மரியாதை செய்தனர். இதனையடுத்து, ராய்சிங்கின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கேரி சம்பலா அருகே இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள், பலர் கலந்துக்கொண்டு, வீரமரணம் அடைந்த ராய்சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.