மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே நாடு முழுவதும் பத்மாவத் திரைப்படம் வெளியானது..!

413

மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே நாடு முழுவதும் பத்மாவத் திரைப்படம் வெளியானது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பத்மாவதி படத்தில், சித்தூர் ராணி பத்மினி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து படத்திற்கு தடைக்கோரி வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, படத்தின் பெயர் பத்மாவத் என மாற்றம் செய்யப்பட்டது.மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே உலகம் முழுவதும் பத்மாவத் திரைப்படம் இன்று வெளியானது. தமிழகத்தில் மட்டும் 150 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது.
எனினும் படத்தை தடைச்செய்ய கோரி ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.
புதுச்சேரியில் பாலாஜி திரையரங்கம் உள்பட 3 திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்புடன் பத்மாவத் படம் திரையிடப்பட்டது.